முத்துநகர் கடற்கரை பூங்காவில் தூய்மை பணி - கனிமொழி கருணாநிதி எம்பி பங்கேற்பு.

முத்துநகர் கடற்கரை பூங்காவில் தூய்மை பணி -  கனிமொழி கருணாநிதி எம்பி பங்கேற்பு.

தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி தூத்துக்குடி மாநகர கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும் விதமாக பீச் ரோடு முத்து நகர் பூங்கா கடற்கரை பகுதியில் 13.10.2024 இன்று காலை, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து சுத்தம் செய்யும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். 

இதில் சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் முத்து நகர் கடற்கரை பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல் ராஜ், சுகாதார குழு தலைவர் சுரேஷ் குமார், திமுக மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வடக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், ஏசுவடியான், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேணி, துணை அமைப்பாளர் ஜேசையா, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பெல்லா, மாமன்ற உறுப்பினர்கள் எடிண்டா, பவானி, ரெக்ஸிலின், சரவணகுமார், நாகேஸ்வரி, ஜெயசீலி, வைதேகி, சுப்புலட்சுமி, வட்ட செயலாளர்கள் டென்சிங், கதிரேசன், பாலு, சுரேஷ்குமார், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் , பொதுமக்கள் ஆகியோர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.