நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் அமைச்சர் கீதாஜீவன் திடிர் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் இருந்து தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி அம்மா உணவகம் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்ளிட்டவைகளுக்கு விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் த கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் ராஜேஷ், தூத்துக்குடி சரக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மு. கலையரசி ஆகியோர் உடன் இருந்தனர்.