தன்னம்பிக்கையுடன் கல்வி கற்பதன் மூலமாக வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் மாணவ மாணவிகளிடம் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு.

தன்னம்பிக்கையுடன் கல்வி கற்பதன் மூலமாக வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் மாணவ மாணவிகளிடம் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இல்லங்களில் தங்கி படித்த மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கான பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார் 

மூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் பள்ளிகளில் நடத்தப்படும் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் இந்த இல்ல குழந்தைகளுக்கான பாராற்று மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தூத்துக்குடி உதவி ஆட்சியர் கௌரவ குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு இல்லங்களில் தங்கி படித்து பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற சுமார் 30 மாணவ மாணவியருக்கு பரிசுகள் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தன்னம்பிக்கையுடன் கல்வி கற்பதன் மூலமாக வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனவே மாணவ மாணவியர் தன்னம்பிக்கையுடன் கல்வி கற்க வேண்டும் எனவும் தமிழக அரசு இல்லங்களில் தங்கி பிடிக்கும் குழந்தைகள் 18 வயது வரை தான் அங்கு தங்கி படிக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளி படிப்பை முடித்தும் தொடர்ந்து தங்கி படிக்கும் விரும்பும் மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி வரை தங்கிப் படித்த வழி வகை செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த கல்வியாண்டு முதல் இந்த இல்லங்களில் 21 வயது வரை தங்கி படிக்கும் மாணவ மாணவியருக்கு தொழில் பயிற்சியும் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

 

இல்லத்தில் தங்கி படிக்கும் மாணவ மாணவியருடன் அமர்ந்து மதிய உணவை அமைச்சர் கீதா ஜீவன் அருந்தினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் ரூபன் கிஷோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரதி தேவி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.