தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் எனவும் வருகின்ற பட்ஜெட்டில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தர உள்ளார் என சமூகநலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கி பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து விதவை மறுமண திருமண நிதி உதவி திட்டம், விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், கலப்பு திருமண நிதி உதவி திட்டம், தாய் தகப்பனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்திற்கான 50ஆயிரம் ரூபாய்க்கான நிதி உதவியும்,மற்றும் தங்க நாணயம்,100 பேருக்கு 44லட்சம் ரூபாய் மதிப்பிலும்.
அதே போல கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆதரவற்ற பெண்கள் என 77 பேருக்கு ஏழரை லட்சம் மதிப்பீட்டில் தையல் மெஷின், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், செல்போன் போன்றவற்றையும்.
திறன் பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார்.முதியோர் உதவித்தொகை வழங்கும் ஆணையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்:
தமிழக ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லாத ஒரு தமிழகமாக விளங்கிட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் மூலமாக குழந்தைகளுக்கும் எடை,உயரம் சரிபாக்கப்பட்டு மக்கள் நல்வாழ் துறையோடு இணைந்து ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவும்
தமிழக முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்கான தேவைப்படும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். பெண்களுக்கு அளித்த வாக்குறுதி எல்லாம் வருகின்ற பட்ஜெட்டில் முதலமைச்சர் நிறைவேற்றி தருவார்.திருநங்கைகளுக்கும் வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு எல்லாம் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி உருவாக்குவதற்காக அரசு செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி பகுதியில் பசுமை அமோனியம் ஒரு நிறுவனம் வரவுள்ளது. மறைமுகமாகவும் நேரடியாகவும் நாம் அதிகள வருமானப் பெறக்கூடிய ஒரு நிலையை உருவாக்கி தந்துள்ளார்கள் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரதிதேவி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் துறை அலுவலர் சங்கரன், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், வட்டாட்சியர் செல்வகுமார், மாநகராட்சி துணைமேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் மாமன்ற உறுப்பினர் சரண்யா ராஜ்குமார்,வைதேகி மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.