தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட ஜீவன் மருத்துவமனை திறப்பு விழா - அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் கீதா மெட்ரிக் பள்ளி அருகில் புதுப்பிக்கப்பட்ட ஜீவன் மருத்துவமனை திறப்பு விழா சேலம் கிருபா மருத்துவமனை தலைமை மருத்துவர் பிராங்கிளின் கிருபா முன்னிலையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில் புதுப்பிக்கப்பட்ட ஜீவன் மருத்துவமனையில் 24 மணி நேர அவசர மருத்துவ சிகிச்சை வசதி, தீவிர சிகிச்சை மருத்துவ கண்காணிப்பு பிரிவு, சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை சேவைகள், ஜீவன் மருந்தகம், பிசியோதரபி சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய லேப் வசதியுடன் அமையப் பெற்றுள்ளது.
இந்த விழாவில் அமைச்சரின் தாயார் எபனேசர் என்.பெரியசாமி, மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் ஜீவன் ஜேக்கப், டாக்டர்கள் மகிழ்ஜான் சந்தோஷ், கீர்த்தனா மகிழ், என்.பி.அசோக், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அருணாதேவி, நாகராஜன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், ராஜ்குமார். மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ஐ.ரவி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மாமன்ற உறுப்பினர்கள் பொன்னப்பன். ஜாக்குலின் ஜெயா. கந்தசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் அ.முத்துச்செல்வம், ராஜாமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார். தொழிலதிபர் சுதன் கீலர் மற்றும் கருணா, மணி, அல்பர்ட், மருத்துவமனை ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.