தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ராஜபாண்டி நகரில் புதிய ரேஷன் கடையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இன்று நிறைவேற்றப்பட்டது இந்த ரேஷன் கடை திறப்பின் மூலம் அப்பகுதியில் உள்ள 450 குடும்ப அட்டைதாரர்கள் மேல் பயனடைவர். அப்பகுதி மக்கள் பல கிலோமீட்டர் சென்று பொருள்களை வாங்கி வந்த சூழ்நிலையில் அப்பகுதியில் ரேஷன் கடை அமைத்ததனால் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சிக்கானப்பட்டது.
இந்த ரேஷன் கடை வாரத்தில் இரண்டு நாட்கள் புதன் மற்றும் சனிகிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் செயல்படும்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வட்டார வழங்கள் அலுவலர் அபுல் காசிம் வட்டாட்சியர் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் திமுக மாநகர தலைவர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் பாலகுருசாமி,45 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரையன்ட் நகர் பகுதி கழக செயலாளர் மாநகராட்சி நகர்நல குழு தலைவர் ராமகிருஷ்ணன்,49 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைதேகி,50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார்,48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், 49 வது வார்டு வட்ட செயலாளர் முக்கையா, அவைத்தலைவர் பெரியசாமி பகுதி கழக பிரதிநிதி கோபால், துணை செயலாளர் சந்தனராஜ்,வட்டப்பிரதிநிதிகள் அய்யாதுரை, சுடலைமணி, ஈஸ்வரன்,பாபு, பொருளாளர் வெங்கடேவரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, ஹரிகிருஷ்ணன்,முத்துப்பாண்டி, துணைச செயலாளர் மாலதி, மகளிர் அணி சாந்தி,கணபதி அம்மாள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.