தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனிமொழி கருணாநிதி எம்பியை ஆதரித்து அமைச்சர் கீதா ஜீவன் சூறாவளி பிரச்சாரம்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கனிமொழி கருணாநிதி எம்பியை ஆதரித்து அமைச்சர் கீதா ஜீவன் சூறாவளி பிரச்சாரம்.

தூத்துக்குடியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் திமுக துணை பொதுச் செயலாளர் எம்பி கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி எம்பியை ஆதரித்து அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி திரேஸ்புரம்பகுதி வார்டுகளில் 6,7,8,9,23,22,26,24, 25,45 பொன் சுப்பையா நகர், கோயில் பிள்ளை நகர், அலங்கார தட்டு, லூர்தம்மாள்புரம், சென்மேரிஸ் காலனி பஸ் ஸ்டாப், S S மாணிக்கபுரம் சந்திப்பு, சாமுவேல் புரம், திரேஸ்புரம் எண்ணெய்கடை சந்திப்பு, உடைமரத் தெரு, பூபால்ராயபுரம் 2வதுதெரு பனச்செல்வம் மண்டபம், திரவியபுரம் மெயின், S S தெரு மெயின், இரட்சணியபுரம், மட்டக்கடை, குருஸ் புரம் வாட்டர் டேங்க் தெரு, புதுத்தெரு ஜார்ஜீயார் கோயில் தெரு, அரசமரம், தட்டார் தெரு, கரிக்களம் காலனி, மற்றும் 40வதுவார்டு ஆகிய பகுதிகளில் கூட்டணி கட்சித் தலைவர் உடன் அரசின் சாதனைகளை கூறி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அமைச்சர் கீதா ஜீவனுக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மக்கள் நீதி மய்யம் ஜவஹர்,மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர் நிர்மல் ராஜ், மீணவரணி மாநில துணை செயலாளர் புளோரன்ஸ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, ஜெயசுதா, அந்தோணி மார்சலின், பவாணி மார்செல், சரவணக்குமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மீனவரணி நகர அமைப்பாளர் டேனி, வட்ட செயலாளர்கள் சேகர், ரவீந்திரன், கருப்பசாமி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பிரபு, தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, சுற்றுச்சூழல் அணி நகர துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், உட்பட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.