தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து அமைச்சர் கீதா ஜீவன் சூறாவளி பிரச்சாரம்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி யை ஆதாித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 29.03.24 அன்று மாலை முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, பொியசாமிநகர், எம்.ஜி.ஆா்நகர், சத்யாநகர், ராஜபாண்டி நகா், ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்; ஏப்.19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒன்றியத்தில் மக்களை மதிக்கின்ற ஆட்சியை ஏற்ப டுத்த தூத்துக்குடி தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி எம்பிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சி இல்லாதபோதும், தூத்துக்குடி தொகுதிக்கு சிறந்த மக்கள் சேவையை கனிமொழி எம்பி ஆற்றினார் என்பதை அனைவரும் அறிவர்.
இதுவரை இருந்த எம்பிக்களில் கனி மொழியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். வாரத்தில் 4 நாட்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்து தொகுதி முழுவதும் உள்ள தொண்டர்கள் வீடுகளில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத் தவர். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்து வரும் திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். மழை வெள்ள நேரத்தில் ஒன்றிய அரசு நிதி தராமல் ஏமாற்றிய போதும், மழை யால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு ₹6 ஆயிரம், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு ₹1 லட்சம் முதல் ₹4 லட்சம் வரை நஷ்டஈடு என இதுவரை எந்த ஆட்சியும் வழங்காத உதவிகளை வழங்கினார்.தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இதில் இன்னும் சிலருக்கு கிடைக்காமல் உள்ளது.
அவர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழ் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல் லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் உன்னத திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது அதனை மாணவர்களுக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளார். உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கவும், தனி நலவாரி யம் அமைத்துள்ளார், இதன் மூலம் முப்பொழுது இல்லாளர்களில் பிள்ளைகளின் திருமண செலவு படிப்பு செலவுகளுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு உதவிகள் கிடைக்கும். ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, இன்னும் பல்வேறு திட் டங்களை செயல்படுத்த முடியும். எனவே, தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி எம்பியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
பிரசாரத்தில் காங். மாநில துணை தலைவர் ஏ பி சி வி சண்முகம், மாநகர் மாவட்டத் தலைவர் முரளிதரன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டல தலைவர் பால குருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளஞைர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சுயம்பு, பட்சிராஜன், ராஜதுரை, வைதேகி, வட்ட செயலாளர்கள் மூக்கையா, செல்வராஜ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, கிளை செயலாளர்கள் பிரசாத், நடேசன் டேனியல், மனோகரன், சந்தனராஜ், மார்க்சிஸ்ட் சார்பில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுணன், ராஜா, பாஸ்கர், மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், பகுதி செயலாளர் பொன்ராஜ், மகாராஜன் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்