தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 3 வது வார்டில் பொது மருத்துவ முகாம் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 3 வது வார்டில் பொது மருத்துவ முகாம் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் 1/07/23 இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் மாநகராட்சி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்கள் நலன் கருதி ஒவ்வொரு வார்டிலும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இன்று தூத்துக்குடி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமினை 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆர்.ரெங்கசாமி துவக்கி வைத்தார். 

மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு காய்ச்சல் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயத்துடிப்பு, போன்றவைகள் பரிசோதனை செய்யப்பட்டன. மருத்துவரின் ஆலோசனையை பெற்று மருந்து பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் சென்றனர்.

இந்த முகாமில் கழக நிர்வாகிகள் வேல்முருகன்,செல்வராஜ் KTC,சண்முகையா, செல்லையா,ராஜாமணி, பால்ராஜ்,சங்கர‌நயினார், வின்சென்ட், பெயிண்டர் ராஜசேகர், அண்ணா துரை,ராஜ்,ராஜா ,முத்துராஜ்,பால சுப்ரமணியன்,ஆறுமுகம், துரைராஜ், செல்வராஜ் EB,லிங்கசாமி‌‌,சேவியர், காளிமுத்து மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.