தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேயா் திடீா் விஜயம்.
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தமிழ்நாடு அரசின் அரும்பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது வருகிறது.
நேற்று இரவு மேயா் ஜெகன் பெரியசாமி திடிரென்று அங்கு விஜயம் செய்தார் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட்டில் நிர்வாகிகள் உடன் நின்று செல்பி எடுத்து கொண்டாா் தொடா்ந்து புக் ஸ்டால் மற்ற கடைகளையும் பாா்வையிட்டாா். அதன் பின் கடற்கரையில் உள்ள உடற்பயிற்சி விளையாட்டு கருவிகளையும் பாா்வையிட்டாா் மாற்றுதிறனாளிகள் கடற்கரைக்கு வரும்பாதைகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நிகழ்வில் 7 வது வாா்டு மாமன்ற உறுப்பினரும் வடக்கு மண்டல தலைவருமான நிா்மல்ராஜ், செல்வராஜ் நகர மீனவரனி பொறுப்பாளா் டேனியல்,மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் உதவியாளா் ரமேஷ் மாவட்ட செய்தி தொடா்பு அலுவலா் ராமச்சந்திரன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.