தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கலியோ லாவா பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு கண்காணிப்பு கேமரா திறப்பு விழா - மேயர் ஜெகன் பெரியசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

சங்கரப்பேரி வீட்டு வசதி வாரிய மனை உரிமைதாரர்கள் நலசங்கம்
எட்டையாபுரம் ரோடு வீட்டு வசதி வாரியத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கலியோ லாவா பூங்காவில் சங்கரப்பேரி வீட்டு வசதி வாரிய மனை உரிமைதாரர்கள் நலசங்கம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா சேவையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் சங்கரப்பேரி வீட்டு வசதி வாரிய மனை உரிமைதாரர்கள் நல சங்க தலைவருமான R.ரெங்கசாமி செயலாளர் T.பாலு,பொருளாளர் M.சங்கரலிங்கம்,சட்ட ஆலோசகர் T.விஜயசுந்தர்,ஒருங்கிணைப்பாளர் R.ராஜசேகர்,துணை தலைவர் R.தெய்வேந்திரன்,துணை செயலாளர்கள் R.பாலசுப்பரமணியன்,A.முருகேசன்செயற்குழு உறுப்பினர்கள்T.அந்தோணியாக்கியம்,R.துரைரஜ், T.R.கந்தசாமி,T.C.ஜெயபாலன்,M.மகபுல் பாஷா,G.பாலசுப்பரமணியன்,A.பாலச்சந்தர்,V.R.வின்சென்ட், A.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.