வீதி வீதியாக நடந்தே சென்று வியாபாரிகள் பொதுமக்கள் மருத்துவ மனை ஊழியர்களை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சந்தித்து கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக வாக்களிக்க துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் களம் காணும் நிலையில் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதை முன்னிருத்தி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் வீதி, வீதியாக சென்று வியாபாரிகளையும் பொதுமக்களையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று (06.04.2024) காலை ஸ்டேட்பாங்க் காலனி, அம்பேத்கர் நகர், அமெரிக்கன் ஆஸ்பத்திரி மெயின் ரோடு, கந்தசாமி புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவ மனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் வியாபாரிகள், பொது மக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் நடந்தே நலம் விசாரித்து வியாபாரம் எப்படி நடக்கிறது என்று கேட்டு துண்டு பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.
மேலும் புனித இஞ்ஞாசியர் புரம் ஆலயத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து விளையாடி கொண்டிருந்த இளைஞர்களிடம் வாக்குகளை கேட்ட அவர் அவர்களுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார்.
இதில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் , வட்ட கழக செயலாளர் சக்கரைசாமி , வட்ட கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தெய்வேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின் , மாவட்ட பிரதிநிதி திரு.நாராயணன், வட்ட கழக பிரதிநிதி திரு.பேச்சிமுத்து அவர்கள், வடக்கு மண்டல காங்கிரஸ் தலைவர் திரு.சேகர், முன்னாள் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் வட்ட கழக பிரதிநிதி கண்ணன் , பகுதி பிரதிநிதி பிரபாகர்,முன்னாள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.