தூத்துக்குடி மாநகராட்சி கூடத்தில் துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்.
தூத்துக்குடி;
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பதாக எடுக்கப்பட வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பணிகள் செய்து கொண்டிருக்கிறோம்.
மாநகரில் மேட்டுப்பட்டி, லூர்தம்மாள்புரம், மீன்வளக் கல்லூரி, திருவிக நகர், லயன்ஸ் டவுன், கரிக்குளம் காலனி, திருச்செந்தூர் சாலை சத்யா நகர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் மாநகராட்சி சொந்தமான மழைநீரை வெளியேற்றும் 76 மின் மோட்டார்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் சோதனை ஓட்டங்கள் முடித்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களும் தங்கள் பகுதிகளில் மழைநீர் தேங்க கூடிய இடங்களை கண்காணித்து உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். மாநகரில் உள்ள பாதாள சாக்கடை உந்து சக்தி நிலையங்களில் திறன் அதிகம் வாய்ந்த மோட்டார்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நமது நகரில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன இந்த இணைப்புகளுக்கு வல்ல நாடு நீரேற்று நிலையத்தில் இருந்து பல்வேறு நிலை சுத்திகரிப்பு முறைகளுக்கு பின்னர் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்தும், தூத்துக்குடி சங்கரப்பேரியில் நடைபெற உள்ள நெய்தல் கலை விழா மற்றும் புத்தகத் திருவிழாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "நம்ம ஸ்ட்ரீட்" நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக மாமன்ற உறுப்பினர்கள் இசக்கி ராஜா, கந்தசாமி, நாகேஸ்வரி, பவானி மார்ஷல், வைதேகி, சந்திரபோஸ், விஜயலட்சுமி மற்றும் அதிமுக கவுன்சிலர் மந்திர மூர்த்தி தங்களது வார்டுகளின் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் குமார் ரெக்லின் ரெங்கசாமி சுயம்பு லிங்கம் முத்துவேல் கந்தசாமி கனகராஜ் சந்திரபோஸ் துணை ஆணையர் ராஜாராம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், மாநகர துணை பொறியாளர் சரவணன் உதவி ஆணையர்கள் மகேந்திரன், கல்யாண சுந்தரம், ஸ்வர்ணலதா, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.