தூத்துக்குடியில் சட்ட மாமேதை அம்பேத்கரை அவமதித்து பேசியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவமதித்து பேசியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கரின் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுதப்பட்டது அவை;
கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் அண்ணல் அம்பேத்கரை இழிவு செய்த அமித்ஷாவை கண்டிக்கின்றோம்
பதவி விலகு பதவி விலகு பாவக்காரன் அமித்ஷாவே பதவிவிலகு
பாதுகாப்போம் பாதுகாப்போம் பாதகர்களிடமிருந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்
மன்னிப்புக்கேள் மன்னிப்புக்கேள் அமித்ஷாவே மன்னிப்புக் கேள்
கொலைகார பாஜகவே உனக்கு அம்பேத்கர் என்றால் இளக்காரமா?
சர்வாதிகாரி அமித்ஷாவே உனக்கு அம்பேத்கர் என்றால் அவமானமா?
எதிர்க்கின்றோம் எதிர்கின்றோம் புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை எதிர்க்கின்றோம் எதிர்கின்றோம்
நிராகரிப்போம் நிராகரிப்போம் பாஜகவை நிராகரிப்போம்
நிராகரிப்போம் நிராகரிப்போம் பாஜகவுடன் கள்ளக்கூட்டணியில் உள்ள அதிமுகவை நிராகரிப்போம் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன் சுரேஷ்குமார் சரவணகுமார் பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா கஸ்தூரி தங்கம் ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் பரமசிவன் மருத்துவர் அணி அருண்குமார் திமுக மாநில பொருளாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன் வட்டச் செயலாளர்கள் சுப்பையா சிங்கராஜ் மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங் மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.