தூத்துக்குடியில் கோடை காலத்திலும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!.

தூத்துக்குடியில் கோடை காலத்திலும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தற்போது வரையிலும் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் ஆரம்பமாய் உள்ளது இந்த கோடை காலத்திலும் மக்களுக்கு தொய்வின்றி குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.

அதனை கருத்தில் கொண்டு இன்று மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் தொடர்ந்து கண்கானிக்கவும்  வரும் கோடை காலங்களை சமாளிக்க தயாராக இருக்கவேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி கூட்டத்தில் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்,மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.