முத்தமிழறிஞர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு 101 மரங்கள் நடும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவங்கி வைத்தார்.
முத்தமிழறிஞர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கரப்பேரியில் இருந்து ஜோதி நகரை இணைக்கும் 60 அடி சாலையில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 101 மரங்கள் நடும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமானகீதா முருகேசன் அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன்,பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி , மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.