தூத்துக்குடி கருத்த பாலம் விரிவாக்கம் செய்ய மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு.

தூத்துக்குடி  கருத்த பாலம் விரிவாக்கம் செய்ய மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு.

தூத்துக்குடி  மாநகராட்சிக்குட்பட்ட கருத்த பாலம் விரிவாக்கம் செய்யவது கூறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி  மாநகராட்சிக்குட்பட்ட கருத்த பாலம் குறுகலாக உள்ளதால் பாலத்தை வாகனங்களின் மூலம் பொதுமக்கள் கடப்பதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வருவதை கருத்தில் கொண்டு அந்த ஒடைப் பாலத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பழைய மாநகராட்சி எதிர்புறம் நடைபெற்று வரும் புதிய வணிக வளாக பணிகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி வாப்கோஸ் குழுவின் தலைவர் அறிவழகன் உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள்,துறை சார்ந்த அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர் ரிக்டர் ஆர்தர் மத்தாது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உதவியாளர் ஜோஸ்பர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மாநகரின் வளர்ச்சி கருதி  முனைப்பு காட்டி வருகிறார் மேயர் ஜெகன் பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.