தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க மேயர் ஜெகன் பெரியசாமி துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க மேயர் ஜெகன் பெரியசாமி துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி மாநகர பகுதிக்கு வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்து வருவதால், மாநகர பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் சில இடங்களில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தற்போது நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாட்டினை பூர்த்தி செய்யும் பொருட்டு கலியாவூர் நீரேற்று நிலையத்திற்கு இன்று நேரில் சென்று மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது தண்ணீர் வரும் பாதையில் அதிக அளவு அமலை செடிகள் இருப்பதனை கண்டறிந்து அவைகளை அகற்றி, நீர் வரும் பாதையினை சீர் செய்து தண்ணீர் சீராக வருவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக கூடுதலான தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. 

இந்த நடவடிக்கையின் மூலம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்கு சீரான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ் கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா, டூவிபுரம் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.