தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 100% நிறைவு பெற்றுள்ளது மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்.

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியபோது தூத்துக்குடி மாநகரத்தில் கடந்த ஓராண்டுகளாக பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற பட்டுள்ளது. குறிப்பாக 2018 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் அறிவியல் ஸ்டெம் பார்க் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதன்படி தற்போது 100 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் தூத்துக்குடி நகரம் முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது இதில் ஆக்கிரமிப்புகள் பாரபச்சமின்றி அகற்றப்பட்டு, குறுகிய சாலைகள் அனைத்தும் 40 அடி சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகள் தங்கள் கடை முன்பு ஒரு பகுதியாக இருசக்கர வாகனத்தை நிறுத்த வாகன ஓட்டிகளிடம் வலியுறுத்த வேண்டும்.
தற்போது மழை காலம் தொடங்கி விட்டதால் மழை நீர் சீராக செல்வதற்கு பக்கிள் ஓடையில் கழிவு நீர் சீராக செல்வதற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் இதை தொடர்ந்து 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் துணை ஆணையர் ராஜாராம், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், நிர்மல் ராஜ், அன்னலட்சுமி மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் குமார் ராமகிருஷ்ணன் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.