தூத்துக்குடி மாநகரில் புதிதாக நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகரில் புதிதாக நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகரில் அனைத்து பகுதிகளிலும் என்டு டு என்ட் என்ற முறையிலே தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி சிவன்கோவில் மற்றும் பொருமாள் கோவில் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது முடிந்துள்ளது.

மேலும் வியாபாரிகள் பொதுமக்கள் வாகனங்களை ஒரு புறமாக நிறுத்தி பொதுமக்கள் சிரமமின்றி கோயிலுக்கு சென்று வர வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நகரின் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது அதன்படி அழகர் ஜூவல்லர்ஸ் முன்பாக மின் விளக்கு கோபுரம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதையும் வரும் நாட்களில் நிறைவேற்றி தரப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மற்றும் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்..