நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில்  சுதந்திர தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தலைமையில் அங்குள்ள கொடி கம்பத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் பொறியாளர்கள் என 126 அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நற்சான்றிதழை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். 

மேலும் சிறப்பாக பணியாற்றிய ஒப்பந்ததாரர்கள்உள்ளிட்டவர்களும் கௌரிக்கப்பட்டனர். தூத்துக்குடியை பசுமையாக்கும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட all can trust,we can trust ஆகியோருக்கு விருது வழங்கி கௌரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி நிர்மல் ராஜ் ,கலைச்செல்வி, அன்னலட்சுமி மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், சரவணகுமார்,கனகராஜ்,கந்தசாமி,முத்துவேல், பச்சிராஜ்,சுயம்புலிங்கம், ராஜதுரை, பொன்னப்பன் இசக்கிராஜா,சீனிவாசன், ராஜேந்திரன், கீதா முருகேசன், ரெக்ஸிலின்,சரண்யா,அதிர்ஷ்ட மணி, மாரியம்மாள், மகேஸ்வரி, வைதேகி,சோமசுந்தரி, மும்தாஜ் , பேபி ஏஞ்சலின்,அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.