தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி மாநகராட்சி 20 வது வார்டு செல்வநாயகபுரம் மற்றும் நந்தகோபாலபுரம் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வியாபாரிகளிடமும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார்.

மேலும், வாக்கு சேகரிக்க வந்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலளர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், முன்னாள் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் வட்ட செயலாளரும் வட்ட பிரதிநிதியுமான மாரியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் வட்ட பிரதிநிதி கண்ணன், முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, பகுதி பிரதிநிதி பிரபாகர் முன்னாள் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் முத்துதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.