திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக புரோட்டா கடையில் புரோட்டா சுட்டு கொடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு!
தூத்துக்குடி கே வி கே நகர் அண்ணா நகர் பகுதியில் வியாபாரிகள் பொதுமக்களிடம் நடந்தே சென்று மேயர் ஜெகன் பெரியசாமி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் 2 வது முறையாக திமுக துணைப் பொதுச்செயலாளர் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். இதனையடுத்து, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி, திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து உதய சூரியன் சின்னத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று இரவு தூத்துக்குடி கே வி கே நகர் அண்ணா நகர் பகுதி வியாபாரிகள் பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி, ஹோட்டலில் புரோட்டா சுட்டுக்கொடுத்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இதில் கவுன்சிலர் கனகராஜ் கந்தசாமி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன் பகுதி செயலாளர் ரவிச்சந்திரன் போல் பேட்டை பிரதிநிதி பிரபாகரன் மற்றும் ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.