நகரின் தூய்மையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க - மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

நகரின் தூய்மையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க  பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க -  மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பருவ மழையின் காரணமாக காலிமனைகளில் மழைநீர் தேங்குவதால் சுகாதார கேடு மற்றும் தொற்று நோய் பரவுவதை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுரைப்படி பொது சுகாதார பிரிவு மூலமாக சுமார் 400 காலிமனை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. 

அதன்படி மழைநீர் தேங்கியுள்ள காலிமனை உரிமையாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் மண் போட்டு மூடி சுகாதார கேடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வடக்கு மண்டல பகுதியில் 23 காலிமனைகள் மண் நிரப்பி மூடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் காலிமனை உரிமையாளர்களை பாரட்டும் விதமாக மாநகராட்சி அலுவலகத்தில் 31.01.2025 அன்று மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இது குறித்து மேயர் பேசுகையில்;

காலிமனை உரிமையாளர்கள் அனைவரும் தாமாக முன் வந்து காலிமனைகளில் உள்ள முட்புதர்களை சுத்தம் செய்தும் மழைநீர் தேங்காதவாறு மண் கொண்டு நிரப்பியும் மூடவேண்டும். நகரின் தூய்மைக்கும் பொது சுகாதாரம் பாதுகாக்கும் வகையில் அனைவரும் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.