மாப்பிள்ளையூரணி, இந்திரா நகர் இந்திரசக்தி விநாயகர் ஆலய 34 ஆம் ஆண்டு சதுர்த்தி விழா - மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் தொழில் அதிபர் முருகேசபாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி இந்திரா நகர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இந்திரசக்தி விநாயகர் ஆலய 34 ஆம் ஆண்டு சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணகுமார் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக அயிரவன்பட்டி முருகேச பாண்டியன் கலந்து கொண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி( ரவி) ஒன்றிய கவுன்சிலர் சேவியர், தெற்கு மாவட்ட திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரி முத்து, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, பாரி, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா கிளைச் செயலாளர் பொன்னுசாமி, முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் அணி ராஜேந்திரன், ஊர் கமிட்டி தலைவர் ஆறுமுகம் சாமி செயலாளர் தங்கராஜ் பரமசிவன் மற்றும் இளைஞர் அணி மகளிர் அணியினர் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.