தூத்துக்குடி சி.வ.குளத்தின் கரைப்பகுதியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபயிற்சி பாதையை எம்பி கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி சி.வ.குளத்தின் கரைப்பகுதியில்  சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபயிற்சி பாதையை எம்பி கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மீளவிட்டான் சாலையில் உள்ள சி.வ.குளத்தின் கரையில் நமக்கு நாமே திட்டம் -2022-23 கீழ் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சிமெண்ட் பேவர் பிளாக் கொண்டு சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நடைபாதையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

தொடர்ந்து இந்த நடைபாதையை சுற்றிலும் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியையும் கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.