தூத்துக்குடியில் நடைபெற்ற தொழிற்கடன் வழங்கும் விழாவில் 3145 பயனாளிகளுக்கு ரூ 315 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை எம்பி கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற தொழிற்கடன் வழங்கும் விழாவில் 3145 பயனாளிகளுக்கு ரூ 315 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் கடன் வசதியாக்கல் முகாம் கடன் ஆணைகளை பயனாளிகளுக்கு - கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள காமராஜர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 315 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஆணைகளை 3145 பயனாளிகளுக்கு வழங்கினர்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் துறை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வேளாண் வணிகத்துறை கதர் கிராம தொழில் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர் மேலும் லோகியா நகர் சுடலை காலனி சிலோன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்தது இந்த மக்களுக்கும் பட்டாக்களை கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் சொர்ணலதா சார் ஆட்சியர் கௌரவ் குமார் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.