ஒட்டப்பிடாரம் குலசேகரநல்லூர் கிராமத்தில் அண்மையில் பெய்த கனமழையில் பிட்ச மதகு ஓடையில் கரை உடைப்பு - சீரமைக்கப்பட்ட கரை உடைப்புகளை சண்முகையா எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குலசேகரநல்லூர் கிராமத்தில் அண்மையில் பெய்த கனமழையில் பிட்ச மதகு ஓடையில் கரை உடைப்பு ஏற்பட்டது. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சீரமைக்கப்பட்ட கரை உடைப்புகள் மற்றும் கரைகளின் தன்மை குறித்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் குருநாதன் ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமணன் மாவட்ட பிரதிநிதி கண்ணன்முறம்பன்ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுடலைமணி ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி ஒசநூத்து கிளைக் கழக செயலாளர் சண்முகம் ராமர் வடக்கு ஆரைக்குளம் கிளை பிரதிநிதி சமுத்திரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.