ஒட்டப்பிடாரம் கல்லத்திக்கிணறு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கீழ் பல்வேறு பணிகளுக்கு எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் கல்லத்திக்கிணறு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கீழ் பல்வேறு பணிகளுக்கு எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பரிவில்லிக்கோட்டை ஊராட்சி கல்லத்திக்கிணறு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 9.64 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகக் கடை கட்டும் பணி மற்றும் கல்லத்திக்கிணறு அம்மன் கோவில் மேலத்தெருவில் 5.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி மேலும் கல்லத்திக்கிணறு கிழக்கு தெருவில் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி போன்ற பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூட பணிகளையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர் சுரேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உதவி பொறியாளர் பால நமச்சிவாயம் பணி மேற்பார்வையாளர் சங்கர் மின்வாரிய உதவி பொறியாளர் பால் முனியசாமி  ஊராட்சி மன்ற தலைவர் பெல்சி ஊராட்சி செயலர் பழனிசாமி மகளிரணி தாமரை இளைஞரணி அலெக்ஸ் பிரதீப் கிளை செயலாளர் ஆரோக்கியசாமி கிளை பிரதிநிதி செபஸ்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.