ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கூட்டுடன்காடு கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிக்கு எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன்காடு கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் உதவி பொறியாளர் ரவி தூத்துக்குடி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன்மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ்ஊராட்சி மன்ற தலைவர் மாங்கனி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் இந்திரா மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.