ஒட்டப்பிடாரம் பரிவில்லிக்கோட்டையில் 72 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடத்தை எம்எல்ஏ சண்முகையா திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பரிவில்லிக்கோட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உதவி பொறியாளர் பால நமச்சிவாயம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் ஊராட்சி மன்ற தலைவர் பெல்சி ஊராட்சி செயலர் பழனிச்சாமி மகளிரணி பழனியம்மாள் கிளை செயலாளர்கள் சௌந்திரராஜன் சிவகுமார் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.