ஒட்டப்பிடாரம் ஆலந்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க எம்எல்ஏ சண்முகையா நடவடிக்கை.

ஒட்டப்பிடாரம் ஆலந்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க எம்எல்ஏ சண்முகையா நடவடிக்கை.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலந்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணி புரிந்து வந்த நிலையில் ஒரு ஆசிரியரை கடந்த சில தினங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி அந்த கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவை சந்தித்து மீண்டும் ஒரு ஆசிரியரை பள்ளியில் நியமனம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததிருந்தனர்.

இதனையடுத்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆலந்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளியில் கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

 மேலும் ஆலந்தா கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் இருப்பதாக கிராம மக்கள் கோரிக்கையின் பேரில் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். 

மற்றும் சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,அரவிந்தன் உதவி பொறியாளர் தளவாய்,மின்வாரிய செயற்பொறியாளர் சுடலைமுத்து, உதவி பொறியாளர் ராஜேஷ், பள்ளி தலைமை ஆசிரியை வேளாங்கன்னி, கருங்குளம் ஒன்றிய கழக செயலாளர்கள் சுரேஷ்காந்தி,ராமசாமி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால்கிளைச் செயலாளர்கள் சுடலைமணி, மணி,இளங்கோமற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.