ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலதட்டப்பாறையில் ரூ 7 கோடி மதிப்பீட்டில் அரசினர் குழந்தைகள் இல்லம் கட்டும் பணி - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலதட்டப்பாறையில் ரூ 7 கோடி மதிப்பீட்டில் அரசினர் குழந்தைகள் இல்லம் கட்டும் பணி - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலதட்டப்பாறை வ.உ.சி. நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைதுறை சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய அரசினர் குழந்தைகள் இல்லம் கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்வில் பள்ளி கண்காணிப்பாளர் பாண்டியன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வி உதவி பொறியாளர் ரேணுகா தூத்துக்குடி மேற்கு ஒன்றிய கழகசெயலாளர் புதூர்.S.R.சுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதி கணேசன் ஒன்றிய துணை செயலாளர்கள் வக்கீல் நாராயணன் ஜெயராஜ் நெசவாளர் அணி பலவேசம் கலை இலக்கிய அணி முடிவை.ஆறுமுகம் ஒன்றிய பொருளாளர் சின்னராஜ் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ்வரி முத்துமாரியப்பன் தொண்டரணி சங்கர் தகவல் தொழில்நுட்ப அணி சுடலைமணி வசந்த் கிளை செயலாளர்கள் கந்தசாமி ரெங்கநாதன் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.