18-லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டையாபுரம் பேரூராட்சி 1-வது வார்டு கான்சாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 -லட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தமும்,15-வது வார்டில் 11-லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையத்துக்கும் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன்,எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதி கணேசன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.