கோவில்பட்டியிலிருந்து N.வேடபட்டி வந்து செல்லும் பேருந்து நாகலாபுரம் வரை நீட்டிப்பு செய்து எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்கள்.
புதூர் ஊராட்சி ஒன்றியம், N.வேடபட்டி கிராமத்தில் கோவில்பட்டியிலிருந்து N.வேடபட்டி வந்து செல்லும் பேருந்து போக்குவரத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் நாகலாபுரம் வரை நீட்டிப்பு செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,விளாத்திகுளம் பணிமனை கிளை மேலாளர் கிருஷ்ணகுமார்,கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ஜெகநாதன்,N.வேடபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்லக்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல்,மகேந்திரன் கிளைச் செயலாளர் சத்தியமூர்த்தி விவசாய சங்க பிரதிநிதி வரதராஜன் உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.