கலைத் திருவிழாவில் முதல் இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வாழ்த்து!

தமிழ்நாடு அரசு அரசு சார்பில் (12.01.2023) அன்று மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9,10-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் தேவராட்டத்தில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்றைய தினம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனை நேரில் சந்தித்து மாணவ மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, ஆசிரியர்கள் சந்திரவேல், இளவரசி, அசோக்குமார், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.