விபத்தில் மரணம் அடைந்த குடும்பத்தாருக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆறுதல்!.
எட்டயபுரம் அருகே நேற்றைய தினம் சாலை விபத்தில் பலியான கான்சாபுரத்தைச் சேர்ந்த முத்துமாரியப்பன்(42) அன்னாரின் குடும்பத்தாருக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மறைந்த முத்து மாரியப்பனின் மகன்களின் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு எம்எல்ஏ மார்க்கண்டேயன் அவர்களின் நலம் விசாரித்து தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்கும்படி மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்.