எட்டயபுரத்தில் அதிமுக நகர கழக செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எட்டயபுரத்தில் அதிமுக நகர கழக செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எட்டையபுரம் நகர கழக செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்:- 

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்காத மனிதனே கிடையாது.

அந்த 3 எழுத்துக்கு சொந்தக்காரர் இ.பி.எஸ் தான்

அதிமுக ஆட்சி காலத்தில் புரட்சி கவிஞர் பாரதியாருக்கு பெருமை சேர்த்தவர் தான் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் தான் மத நல்லிணக்க இயக்கத்தை போற்றுகின்ற ஒரே கட்சி அதிமுக தான் எனவும்,

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்கு தவழ்ந்தும் ஒடியும் உழைத்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி போல் எடுத்த எடுப்பிலே அமைச்சர் ஆகிவிடவில்லை 2.5 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் கட்சியாக அதிமுக உள்ளது.

சட்டப்பேரவையில் எங்களைப் பார்த்து அதிமுகவில் தொண்டன் கூட அமைச்சர் ஆக முடியும் என்று துரைமுருகனே நினைக்கிறார்.

உதயநிதி அமைச்சராகும் முன்பு அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறினார்கள் அப்படி கூறிய நிலையில் அமைச்சராக ஆக்கபட்டர் தற்போது துணை முதல்வர் பதவி குறித்து வதந்தி பரப்புவதாக முதல்வர் கூறுகிறார்,

பொங்கல் பரிசு அதிமுக ஆட்சி காலத்தில் 2500 வழங்கப்பட்ட போது 5000 கொடுங்கள் என்று கூறியவர் தான் ஸ்டாலின்.

தற்போது பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்கி உள்ளார்கள் நாங்கள் வழங்கி 2500 கூட வழங்கவில்லை அதுவும் போராட்டங்களை முன்னெடுப்போம் அறிவித்த பிறகு தான் பொங்கல் பரிசு 1000 அறிவித்தார்கள்..

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வைப்பார் தாமிரபரணி அணை இனைக்கபடும் என்று அறிவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான் 

மழை வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழை இந்த மாதம் வரை வடியாத மழை வெள்ளமாக தான் காட்சி அளிக்கிறதுஎன்று பேசினார்.

ஜனவரி 31 திமுகவுக்கு அழிவு காலம் ஏற்பட வாய்ப்புள்ளது என சூசகமாக கூறினார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.