எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் நகர செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை!

நாடு முழுவதும் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் நடுவிற்பட்டி அலங்காரி அம்மன் கோவில் தெருவில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி செல்வி, சாந்தி, அவை தலைவர் கணபதி வார்டு செயலாளர்கள் கருப்பசாமி,சிவசங்கர பாண்டியன்,சின்னத்துரை,சொக்கன், , மோகன்,ஜஸ் முனியசாமி , முனியசாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.