மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் கவுன்சிலர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவு; 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடபடும் மேயர் ஜெகன் பெரியசாமி.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் கவுன்சிலர்கள் பதவியேற்று  ஓராண்டு நிறைவு;  70 ஆயிரம் மரக்கன்றுகள் நடபடும் மேயர் ஜெகன் பெரியசாமி.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார், முன்னிலையில் மாநகர கூட்டரங்கில் நடைபெற்றது. 

மேயர் ஜெகன்பெரியசாமி பேசுகையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டும், தூத்துக்குடி மாநகராட்சி மேயராக நானும், கவுன்சிலர்களாக நீங்களும் பொறுப்பேற்று மார்ச் 4ம் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையிலும், தூத்துக்குடி மாநகராட்சியை பசுமையாக்கிடும் பொருட்டும் மாநகராட்சியிலுள்ள 60வார்டு பகுதிகளிலும் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது.

இதில் முதல் கட்டமாக வரும் 4ம் தேதி தூத்துக்குடி தருவைக்குளம் குப்பை சேகரிப்பு கிடங்கு அருகிலுள்ள பகுதிகளில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட இருக்கிறது. இவ்விடத்தினை பசுமையாக்கும் வகையில் இங்கு அதிக அளவிலான மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதுபோன்று, மாநகராட்சியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க்கப்பட்டுள்ள இடங்களிலும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகளின் காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் இந்த திட்டத்திலான பணிகள் அனைத்தையும் இரண்டு மாதத்திற்குள் முடித்திட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை பெரும்பாலும் ஜூன் மாதத்திற்கு முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்த அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் கீழ் தூத்துக்குடி மாநகராட்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 

இந்தத் திட்டத்தில் கூடுதலாக 10 பள்ளிகளை சேர்த்து வழங்க ஒருங்கிணைந்த சமையற் கூடம் அமைத்து செயல்படுவதற்கு நிர்வாக அனுமதி கிடைக்க பெற்றுள்ளது. எனவே முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாநகராட்சியின் 10 பள்ளிகளில் படிக்கும் 1,819 மாணவ மாணவிகளுக்கு உணவு தயார் செய்து வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுதியா னவர்களுக்கு ஒப்பந்தம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு திறனை அதிகரிக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும், நாட்டின் அன்றாட நிகழ்வுகளை அறிந்திடவும் சமூக உணர்வினை வளர்த்திடவும் அரசு தேர்வுகளுக்கு தயார் செய்திட ஏதுவாக தினசரி நாளிதழ்கள் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் மூலம் மழைநீர் முள்ளக்காடு ஓடையை அடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது, ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இக்கூட்டத்தில் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.