கொடியன்குளம் முதல் மருகல்தலை வரை ரூ 80 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொடியங்குளம் கிராமத்தில் கொடியன்குளம் முதல் மருகல்தலை வரை 80 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கற்சாலை அமைக்கும் பணி மேலும் கொடியங்குளம் கிராமத்தில் 12 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 120 மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் 5.57 லட்சம் மதிப்பீட்டில் 63KVA திறன் கொண்ட புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் யூனியன் ஆணையாளர் சசிகுமார் மின்வாரிய உதவி பொறியாளர் சுடலைமுத்து உதவி பொறியாளர் ராஜேஷ் பணி மேற்பார்வையாளர் சங்கர் கிராம நிர்வாக அலுவலர் அழகுமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் துணைத் தலைவர் கௌதம் ஊராட்சி செயலாளர் ராஜன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன் ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் விக்னேஷ் கிளைச் செயலாளர்கள் ராஜ் இளங்கோ மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.