திருச்செந்தூரில் சொத்து வரியை அரசு நிர்ணயம் செய்தபடி செயல்படுத்தக்கோரி குமாரபுரம் ஊர் நல கமிட்டி ஆனையருக்கு கடிதம்.
திருச்செந்தூரில் நகராட்சி சார்பில் சொத்துவரி மக்களை வாட்டி வதைக்கும் வகையில் செரத்து வரியை உயர்த்தி உள்ளது. இது மற்ற நகராட்சியை விட மிக அதிகமாக உள்ளது அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றன.
குமாரபுரம் ஊர்நல கமிட்டி சார்பில் தலைவர் கோடீஸ்வரன் நகராட்சி ஆனையருக்கு கடிதம் அனுப்பியுள்ளர்
அந்த கடிதத்தில் அரசு நிர்ணயம் செய்துள்ளபடி சொத்து வரியை பயணாளிகள் செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் திருச்செந்தூர் நகராட்சி அரசு நிர்ணயம் செய்துள்ள வீட்டுவரியை விட நகராட்சி கூட்டத்தில் பல மடங்கு உயர்த்தி பொதுமக்களிடம் கட்டாய வசூல் செய்துவருகின்றது.
அரசு ஆணையின்படி ABC என மூன்று பிரிவுகளில் வசூல் செய்ய ஆணை பிறப்புத்துள்ளது. அதாவது A பிரிவு குடியிருப்பு வீடுகளுக்கும் B பிரிவு தொழில் கூடங்களுக்கும் C பிரிவு காலி மனை நிலங்களுக்கும் வசூல் செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வீட்டு வரி 600 சதுர அடிக்கு ஒரு விலையும், 600 இருந்து 1200 சதுர அடிக்கு ஒரு விலையும் 1200 லிருந்து 1800 சதுர அடி வரை ஒரு விலையும் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் திருச்செந்தூர் நகராட்சி 27 வார்டுகளையும் ABC என பிரித்து A பிரிவுக்கு 60 பைசாவும் B பிரிவுக்கு 80 பைசாவும் C பிரிவுக்கு 40 பைசாவும் தீர்வை என அரசு ஆணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் திருச்செந்தூர் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
எனவே அரசு நிர்ணயம் செய்த வீட்டு வரியை வசூல் செய்ய ஆணையர் நடவடிக்கை எடுக்க மறுசீராய்வு செய்ய வேண்டும் மறுசீராய்வு செய்து முடிவு எடுக்கும்வரை சொத்துவரி, வீட்டு வரியை யாரும் செலுத்த மாட்டோம் என குமாரபுரம் ஊர் தலைவர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.