தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவோம் - அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் .

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவோம் -  அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் .

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாள் விழா மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து தூத்துக்குடி திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்வர் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;

திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவர், எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவச் சிந்தனையுடன் தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலுமான, அனைத்து பகுதிகளிலுமான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளார் நமது தலைவர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் 

தொட்டதெல்லாம் வெற்றி எனும் வகையில் தலைவர் பொறுப்பை எற்ற பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை உறுதிசெய்து சரித்திரம் படைத்து இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறார். நமது தலைவர் இன்றைய நிலையில் தமிழ் மக்களின் தனிப்பெரும் தலைவராக பரிணமித்துள்ளார்  

தமிழ்நாட்டின் பெருமையை நிலைநிறுத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வழியில் எவ்வித சமரசமும் இன்றி தலைநிமிர்ந்து நிற்கும் நமது தலைவரின் 72-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் மார்ச் மாதம் 1-ம் தேதி ஒன்றியங்கள், நகராட்சிகள், பகுதிகள், பேரூராட்சிகள், மாநகராட்சி வட்டங்கள், வார்டுகள், ஊராட்சிகள் போன்ற அனைத்து இடங்களிலும் ஒலி பெருக்கி அமைத்து கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிட வேண்டும்.

மார்ச் மாதம் முழுவதும் பெருமளவில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும். அறுசுவை விருந்து, ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர். காதுகேளாதோர், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு, உடை வழங்க வேண்டும்.

இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்கும் விதமாக கபடி, கால்பந்து, கிரிக்கெட், கைபந்து, இறகுபந்து, கூடைப்பந்து, போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்திட வேண்டும். விளையாட்டுக் குழுக்களுக்கு

உபகரணங்கள், ஜெர்சி வழங்கிட வேண்டும்.ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதோடு வாழ்வாதாரத்திற்கான கருவிகள் வழங்கிட வேண்டும். தூய்மைகாவலர்களுக்கு சீருடை வழங்கிட வேண்டும்.

தலைவர் பிறந்தநாளன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், தாய் சேய் பாதுகாப்பு பெட்டகம் வழங்குதல் வேண்டும்.

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்துவதோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி நமது தலைவரின் பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாட வேண்டுமென மாவட்ட செயற்குழு கூட்டம் தீர்மானிக்கிறது.

கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிர்வாகிகள் டேவிட்செல்வின், உமரி சங்கர் ,ராமஜெயம், ஆறுமுகப்பெருமாள், இளையராஜா,சரவணகுமார், புதூர் சுப்பிரமணியன், கே கே ஆர் ஜெயக்கொடி, டிடி சி ராஜேந்திரன், ரெங்கசாமி, பிரம்மசக்தி உள்ளிட்ட கட்சி  நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.