மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.பிறந்தநாள் விழா; சமூக ஆர்வலர் சுரேஷ் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொட்டப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டிமை பஜாரில் முன்னாள் ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளரும் சமூக ஆர்வலருமான என்.சுரேஷ் ஜெயலலிதாவின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் கிளை செயலாளர் கெய்வின்,மர்பி,ராமராஜன்,வரப்பிரசாதம்,மகேஷ், மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.