தூத்துக்குடி பானு பிருந்தாவன் ஹோட்டல் உரிமையாளர் மீது நிலத்தின் உரிமையாளரின் பேத்தி பரபரப்பு குற்றச்சாட்டு!!

தூத்துக்குடி பானு பிருந்தாவன் ஹோட்டல் உரிமையாளர் மீது நிலத்தின் உரிமையாளரின் பேத்தி பரபரப்பு குற்றச்சாட்டு!!

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் பானு பிருந்தாவன் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த காலத்தில் நிலத்தின் உரிமையாளர் ஹோட்டல் உரிமையாளரான மணி என்பவருக்கு ஹோட்டல் நடத்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் நிலத்தினை வழங்கி உள்ளார். ஒப்பந்த காலம் முடிவுற்ற நிலையில் ஹோட்டலை காலி செய்யுங்கள் என்று கூறிய நிலையில் காலி செய்ய முடியாது என்று மிரட்டி வருவதாக ஹோட்டல் உரிமையாளர் மீது பேத்தி பரபரப்பு குற்றச்சாட்டு

பேத்தி பானுமதி செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது :-

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் எங்கள் தாத்தா முத்துச்சாமி பிள்ளை என்பவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது தாத்தா முத்துச்சாமி பிள்ளை ஹோட்டல் பானு பிருந்தாவன் உரிமையாளர் மணி என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஹோட்டல் நடத்துவதற்கு இந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கினார். 

பானு பிருந்தாவனம் ஹோட்டல் உரிமையாளர் மணி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் இறந்த நிலையில் தற்போது அவரது மகன் தமிழ்ச்செல்வன் ஹோட்டலை நடத்தி வருகிறார். ஒப்பந்தம் முடிவுற்று காலாவதியான நிலையில் எங்களை மிரட்டி அடியாட்களை வைத்து கொண்டு ஹோட்டலை நடத்தி வருகிறார்.

தற்போது ஹோட்டல் நடத்தி வரும் தமிழ்ச் செல்வனை நேரில் சந்தித்து ஹோட்டல் நடத்துவதற்கான உரிமையை ஒப்பந்தம் அடிப்படையில் நீட்டிப்பு செய்யுங்கள் அல்லது ஹோட்டலை காலி செய்து விடுங்கள் என்று பலமுறை கூறியும் அவர் காலி செய்வதாக இல்லை என்ற அடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் புகார் அளித்த நிலையிலும் அவர் காலி செய்ய மறுத்து வந்தனர். 

சில தினங்களுக்கு முன்னர் எங்கள் இடத்தில் இருக்கக்கூடிய மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு முறையாக மனு அளித்து எங்களுக்கு இந்த மின்கம்பம் தற்போது தேவையில்லை என்றும் தேவைபடும் போது மின்கம்பம் அமைத்து தருமாறு மனு கொடுத்து இருந்தோம்.

ஆனால் தற்போது ஹோட்டல் நடத்தி வரும் தமிழ்ச்செல்வன் ஹோட்டல் நடத்துவதற்கு போதுமான மின்சார வசதி இல்லாத காரணத்தால் தினமும் அவரது ஹோட்டலுக்கு ஜென்செட் பயன்படுத்தி வந்த நிலையில் எங்களை போலவே கையொப்பமிட்டு போலியாக மனு ஒன்றை தயார் செய்து மின்வாரிய அலுவலகத்தில் மனுவினை அளித்து மின்கம்பம் அமைப்பதற்கான தொகையும் செலுத்தி மின்கம்பம் அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

மின்கம்பம் அமைப்பதற்கு மனு வழங்கிய நிலையில் இன்று (22.01.2025) மின்சார வாரியத்தால் இருந்து மின்கம்பத்தை நடுவதற்கு வரும் பொழுது நாங்கள் தற்போது மின்கம்பம் வேண்டாம் என்று சொல்லி நீங்கள் எப்படி மின்கம்பத்தை நடுவதற்கான பணியை மேற்கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். 

அதற்கு மின்வாரியத்தை சார்ந்த பணியாளர்கள் ஹோட்டல் உரிமையாளருக்கு ஆதரவாகவும், மற்றும் காவல் துறையினரும் ஹோட்டல் உரிமையாளருக்கு ஆதரவாகவும் செயல்படுவதை கண்டித்து மின்கம்பத்தை நட விடாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்கள் இடத்தை எங்களுக்கு மீட்டு தரும்படி தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம். பணத்தை பெற்றுக் கொண்டு ஹோட்டல் உரிமையாளருக்கு சாதகமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு கொள்கிறேன் என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.