தூத்துக்குடியில் புதிதாக தொடங்கியுள்ள கார் தொழிற்சாலையில் காண்ட்ராக்ட் எடுத்தவர் காரில் கடத்தல் - எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு.

தூத்துக்குடியில் VINFAST கார் தொழிற்சாலையில் பசுமை தோட்டம் அமைப்பதற்காக சென்னையைச் சார்ந்த காளிமுத்து கான்ட்ராக்ட் ஒப்பந்தம் செய்துள்ளார் கான்ட்ராக்ட் எடுப்பதில் தொழில் போட்டியின் காரணமாக அவரை காரில் கடத்திச் சென்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
காளிமுத்து இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்
அந்த மனுவில்;
நான் சுமார் 25 வருடங்களாக Sri Sun Flower Landscape Architech என்ற நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிறுவனத்தின் மூலம் பெரும் நிறுவனங்களில் பசுமை தோட்டங்கள் அமைத்து நிறுவனங்களை அழகு படுத்தி வருவது சம்பந்தமாக வேலையை ஒப்பந்தத்தின் மூலம் செய்து வருகிறேன். நான் கடந்த பிப்பரவரி 2025 இல் தூத்துகுடி சிப்காட்டில் இயங்கிவரும் VINFAST என்ற நிறுவனத்தில் மேற்படி பசுமை தோட்டம் அமைத்து கொடுப்பதற்கான Tender மூலமாக பணி ஓப்பந்தம் கிடைக்கப்பட்டது. மேற்படி வேலை எனக்கு கிடைத்த பின்பு 3.3.2025ல் காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி SIPCOT இல் அமைந்துள்ள VINFAST நிறுவனத்திற்க்கு நானும் எனது அலுவலக மேலாளர் சரவணனும் வந்து இருந்தோம் அப்போது காலை 11.00 மணியளவில் சண்முகம் என்ற நபரிடமிருந்து 9442351714 என்ற தொலைபேசி எண்னில் இருந்து எனது மேலாளர் சரவணனின் 9884874337அழை வந்தது உனது முதலாளியிடம் போனை கொடுக்குமாறு கூறினார், நான் போனை வாங்கி பேசிய போது என்னிடம் ஒழுங்கு மரியாதையான இந்த ஓப்பந்ததை Cancel செய்து விட்டு ஊரை பார்த்து ஒடி விடு இல்லை எனில் உன்னையும் உனது அலுவலக மேலாளரையும் கடத்தி கொண்டு போய் வெட்டி கொன்று விடுவேன் என கொலைமிரட்டல் விடுத்தனர்.
அதனை தொடத்து OIL BOOTLICTub Sub Contractor or Stalin International Trading Private Limited தூத்துக்குடியில் அமைந்துள்ள நிறுவனத்தின் மேலாளர் ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு என்னை VINFAST நிறுவனத்தில் இருந்து என்னை அழைத்து சென்று சென்னைக்கு பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ அனுப்புமாறு கேட்டுக்கொண்டதின் பேரில் ஸ்டாலின் அவர்கள் சுமார் மாலை 3.10 மணியளவில் VINFAST நிறுவனத்திற்க்கு என்னை அழைத்து செல்ல அவருடைய KWID காரில் வந்தார். பின்பு சுமார் மாலை 4.10 மணியளவில் நாங்கள் VINFAST நிறுவனத்தை விட்டு வெளியே வந்தோம். காரை ஸ்டாலின் ஓட்டினார் நான் முன்பக்கம் இடது பக்கத்தில் அமர்ந்து இருந்தேன் எனது அலுவலக மேலாளர் பின் சீட்டில் அமர்ந்து இருந்தார். நாங்கள் VINFAST நிறுவனத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருந்து காரை இடது பக்கம் திறுப்பும் போது பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய 6 நபர்கள், இரண்டு இருசக்கர வாகணத்தில் வந்து கார் மூன்பு நிறுத்தி எங்களது காரை வழிமறித்து, காரை ஓட்டி கொண்டு இருந்த ஸ்டாலின் என்பரை கழுத்தில் கத்தியை வைத்து அவரிடம் இருந்த இரண்டு செல்போனை பறித்து வைத்து கொண்டனர் மேலும் மிரட்டி காரில் இருந்து வெளியே இழுத்து காரின் பின்பக்கதின் உள்ளே அடைத்து ப 3 நபர்கள் எங்கள் காரில் ஏறி அதில் ஒரு நபர் எங்களது காரை ஓட்டி கொண்டு தூத்துகுடி to மதுரை நான்கு வழிசாலைக்கு வந்தனர் அந்த நான்கு வழிசாலையில் இருந்த காரில் ஸ்டாலின் அங்கிருந்தவர்களிடம் என்னை காப்பத்துங்கள் என்று கத்தி கூச்சலிட்டவுடன் அங்கிருந்து வந்த ஸ்டாலினின் தம்பி அருள்ராஜ் மற்றும் 4 நபர்கள் TATA SUMO காரில் வந்து இறங்கியவுடன் மேற்படி நபர்கள் எங்களை விட்டு. எங்களது காரில் இருந்து ஓடிவிட்டனர். நான் என்னை கொன்று விடுவார்கள் என்று உயிருக்கு பந்து நானும் எனது மேலாளரும் திருநெல்வேலி வந்து சென்னைக்குசென்றுவிட்டோம். எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் புகார் மனு அளித்து இருக்கிறேன்.
எனவே அலுவலக மேலாளர் சரவணன் மற்றும் எனது நிறுவன Sub Contractor ஸ்டாலின் ஆகியோரை காரில் கடத்தி, கொலை மிரட்டல் செய்தும் ஸ்டாலினின் சென்போன்களை பறித்து சென்ற மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.