தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன அந்த வகையில் தூத்துக்குடி 3ம் மைல் சங்கர் காலனி பகுதியில் 1200 மரங்கள் நடும் விழா இன்று நடைபெற்றது
.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டி துவங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஒரே நேரத்தில் 1200 மரக்கன்றுகளும் நடப்பட்டது மேலும் தூய்மையான தூத்துக்குடி என்ற விழிப்புணர்வு உறுதிமொழியும் கனிமொழி எம்பி தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை கனிமொழி எம் பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் துணை மேயர் ஜெனிட்டா தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த் சேகரன் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி,அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார், கனகராஜ், ராமகிருஷ்ணன்,இசக்கி ராஜா, கீதா முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா,மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள்,மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ்,உதவியாளர் பிரபாகர், தூய்மை பணியாளர்கள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.