கனிமொழி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் - மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
திமுக துணை பொதுச் செயலாளர் பாராளுமன்ற குழு துணை தலைவர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பணிகள் குழு தலைவர் மாநகர துணை செயலாளர் 14 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன் ஏற்பாட்டில் வி எம் எஸ் நகர் கிங் ஆப் கிங் பள்ளியில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை காவேரி மருத்துவமனை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமினை துவக்கி வைப்பதற்கு முன்பாக பிரம்மாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ் மோகன் செல்வின் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா,பகுதி செயலாளர் ரவிந்திரன்,சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ஜெயக்குமார்,முன்னாள் மாமன்ற உறுப்பினர் பகுதி செயலாளருமான ரவீந்திரன்,மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், நாகேஸ்வரி, வைதேகி, சுப்புலட்சுமி, ஜெயசீலி, பவாணி மார்சல், பொது குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா கஸ்தூரி தங்கம் , மகளிரணி கவிதா தேவி, மகளிர் தொண்டரணி பெல்லா ஐடி விங் அருணா தேவி மாணவரணி சத்யா, மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.