தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (07.12.2024) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் எம்பி கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.