தூத்துக்குடியில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா - மத்திய மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கி கொண்டாட்டம்.

தூத்துக்குடியில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா -  மத்திய மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கி கொண்டாட்டம்.

தூத்துக்குடி, நவ. 7- மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமலஹாசன் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யத்தின் நற்பணி அணி சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்ப்பட்டது.

தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யத்தின் நற்பணி அணி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் துணைச் செயலாளர் அக்பர், அக்பர்.தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் மதன்,ஒன்றிய செயலாளர் சேர்ம துரை, தொழிலாளர் அணி சுப்பிரமணி ஆகியோர் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவரணி அமைப்பாளர் எஸ் அருண்குமார், வட்டச் செயலாளர் சகாயராஜ், இசக்கி,மனோகர்,கே அருணாச்சலம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நற்பணி இயக்க மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன் செய்திருந்தார்.